குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “குஜராத், மோர்பி ஆற்றில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்; ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர்; நாங்கள் உதவ முயற்சிப்போம்; இதில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை. யார் மீதும் குற்றஞ்சாட்டவும் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.