புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருந்த நோயாளியை டாக்டரால் குணப்படுத்தமுடியவில்லை என்று மந்திரவாதியை அழைத்து மந்திரம் மூலம் குணப்படுத்த நினைத்த மருத்துவரால் இறந்த நோயாளி.
புனேவில் 24 வயதான சந்தியா சோனாவானே, மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தனியார் க்ளினிக்கில் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சதிஷ் சவாண் அவரை குணப்படுத்துவது கடினம் என்றும், மருத்துவமனையில் வைத்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியதால் அவர் தீனாநாத் மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலையை குணப்படுத்த முயன்ற மருத்துவர் சவாண் மருத்துவத்தை நம்பி இனி உபயோகம் இல்லை என்று முடிவு செய்து, மாந்திரீகம் மூலம் குணப்படுத்துவது என்று முடிவு செய்தார். அதன்பின் சந்தியா இருந்த ஐ.சி.யுவிற்கு ஒரு மந்திரவாதியை அழைத்துவந்து மந்திரம் மூலம் குணப்படுத்தும்பொழுது சந்தியாவின் உயிர் பிரிந்ததது .
அதன்பின் மருத்துவர் சவானுக்கு சந்தியாவின் குடும்பத்தார் போன் செய்துள்ளனர். மருத்துவர் அவர்களின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்திருக்கிறார். அவர் தவிர்ப்பதை உணர்ந்த சந்தியாவின் குடும்பத்தார் ஆலங்கார் காவல் நிலையத்தில் மந்திரவாதி மீதும், மருத்துவர் மீதும் புகார் அளித்தனர். காவல்துறையினர் ஐ.சி.யுவிலிருந்த சி.சி.டிவி கேமராவை ஆராய்ந்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் "நாங்கள் ஐ.சி.யுவிற்குள் செல்ல மிகுந்த கட்டுப்பாடுகள் வைத்துள்ளோம், மருத்துவர்களைத் தவிர வேறு யாரையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், சந்தியா உடல் உறுப்புகள் செயலிழந்துதான் இறந்தார்" என்றும் கூறியுள்ளது.