கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் மாமல்லப்புரத்தில் கலைச்சிற்பங்களை பார்த்து ரசித்தனர். மேலும் சீன அதிபருக்கு கலைச்சிற்பங்கள் பற்றிய வரலாற்றை விளக்கினார். அதை தொடர்ந்து கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து, பேசியதுடன் இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாமல்லபுரம் பயணம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். அதில் மாமல்லபுரத்தின் அழகிய கரையில் இருந்த போது நான் எழுதிய கவிதை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவிதையில் " அலைகடலே அடியேனின் வணக்கம்" என்ற வரியுடன் தொடங்குகிறது.
சீன அதிபருடனான சந்திப்பின் போது பிரதமர், தமிழக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார் என்பதும், தமிழக வருகை குறித்து ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.