Published on 06/09/2021 | Edited on 06/09/2021

இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல் கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதைப் போன்று அன்றைய தினம் வேறு தேர்வுகள் இருப்பதாலும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வேறு சிலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று 16 லட்சம் மாணவர்கள் எழுதும் தேர்வை ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் தேர்வு நடைபெறுவது தற்போது உறதி செய்யப்பட்டுள்ளது.