Published on 15/02/2020 | Edited on 15/02/2020

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் மத்திய பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசிய பூங்காவை விசிட் செய்துள்ளார். அப்போது, ஒரு புலியை படம் பிடித்த தோனி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை, ‘புலியை படம் எடுத்த புலி’என்று தோனியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
