70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்த மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவித்திருந்தார். அதன்படி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (14.01.2020) காலை 11.00 மணி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21- ஆம் தேதி ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்ப பெற ஜனவரி 24 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறும். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ளதால டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.