Skip to main content

9வது மாடியிலிருந்து கீழே குதித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்... தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்ட முதல்வர்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

The daughter of the IAS officer who jumped down from the 9th floor

 

கேரள முதல்வா் பிணராய் விஜயனின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறையின் செயலாளராக இருந்துவருபவா் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஆனந்த சிங். இவருடைய மனைவி நிலம் சிங். இவா்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பவ்யா சிங் (16), இரண்டாவது மகள் ஹெரா சிங் (14). 2000ஆம் ஆண்டு கேரளா ஐ.ஏ.எஸ். கேடரான ஆனந்த சிங், கேரளாவைச் சோ்ந்த இ. அகமது மத்திய மந்திாியாக இருந்தபோது அவருடன் வெளியுறவுத்துறையில் பணியாற்றிவந்தாா். இந்த நிலையில், இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றுக்குச் சென்றிருந்த ஆனந்த சிங், 2019இல் கேரள அரசில் பணியைத் தொடா்ந்தார். தற்போது பொதுப்பணித்துறைச் செயலாளராக பணியாற்றிவருகிறாா்.

 

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கேரளாவுக்கு அழைத்துவந்து, திருவனந்தபுரம் ஜவஹா் நகாில் உள்ள ஒரு குடியிருப்பில் 9வது மாடியில் வசித்துவந்தாா். இந்தக் குடியிருப்பில்தான் கேரள அரசின் உயா் அதிகாாிகள் பல போ் வசித்துவருகிறாா்கள். இந்நிலையில், ஆனந்த சிங்கின் மூத்த மகளான பவ்யா சிங் பட்டம் கேந்திாிய வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். அவர், நேற்று முன்தினம் (16.09.2021) மதியம் வீட்டின் பால்கனியில் தனியாக இருந்த நிலையில், மேலிருந்து கீழே விழுந்து இறந்தாா். அந்த நேரத்தில்தான் ஆனந்த சிங்கும் வீட்டுக்குச் சாப்பிட வந்து லிஃப்டில் மாடிக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது குடியிருப்பு காவலாளியின் சத்தம் மூலம் இதைக் கேள்விப்பட்ட ஆனந்த சிங் மற்றும் அவரது மனைவி, கீழே வந்து மகள் இறந்து கிடப்பதைப் பாா்த்துக் கதறி அழுதனா்.

 

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனே முதல்வா் பிணராய் விஜயன், மந்திாி முகம்மது ரியாஸ், தலைமைச் செயலாளா், டிஜிபி, கலெக்டா் என அதிகாாிகள் அங்கு வந்து ஆனந்த சிங்குக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் கூறினர். மேலும், பிணராய் விஜயன் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து போலீசாா் முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராவைப் பாிசோதனை செய்ததில், பால்கனியில் இருந்து செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த பவ்யா சிங், திடீரென்று அங்கிருந்த மேஜையின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது தொியவந்தது. இதையடுத்து போலீசாா், பவ்யா சிங் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காக கீழே குதித்து தற்கொலை செய்தாா்? அவா் செல்ஃபோனில் யாருடன் பேசிக்கொண்டிருந்தாா் என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகிறாா்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த தலைவர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Leaders who voted with passion for Lok Sabha elections

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Leaders who voted with passion for Lok Sabha elections

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Leaders who voted with passion for Lok Sabha elections

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 161இல் வாக்களித்தார். கேரளா மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. வேணுகோபால் வாக்களித்தார். ராஜஸ்தான் மாநில பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜலவாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பரவூரில் உள்ள வாக்குச் சாவடியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வாக்களித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எழுத்தாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி பெங்களூருவில் வாக்களித்தார்.

Leaders who voted with passion for Lok Sabha elections

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நரசிங்பூரில் மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் வாக்களித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் வாக்களித்தார். 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.