Skip to main content

ராஜஸ்தானில் சூடுபிடிக்கும் மாட்டு கோமிய வியாபாரம்! ஒரு லிட்டர் 30 ரூபாய்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

 

cow

 

 

 

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மாட்டு கோமியத்திற்கு டிமாண்ட் கூடியுள்ளது. ராஜஸ்தானில் பசு புனிதமாக கருத்தப்பட்டுவருகிறது. அண்மையில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பசுவை கடத்துபவர்களை அடித்து கொல்லும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றுவந்த நிலையில் பாலின் விலையை விட மாட்டு கோமியத்தின் விலை அதிகரித்துள்ளது.

 

 

 

பசுவின் கோமியம் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஒரு மருத்துவப்பொருளாகவே பார்க்கப்பட்டுவருகிறது. தற்போது ராஜஸ்தானில் கிர் மற்றும் தர்பார்கள் எனப்படும் பசுவகைளின் கோமியத்திற்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. ஒரு லிட்டர் மாட்டு பால் ரூபாய் 22 முதல் ரூபாய் 25-க்கும் விற்கும் நிலையில் பசு கோமியம் அதிகபட்சமாக லிட்டர் 30 ரூபாய்க்கு மார்க்கெட்களில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் பால் வியாபாரத்தோடு பசு கோமிய வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாக மாட்டு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்