Skip to main content

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி! ஆம் ஆத்மி அமைச்சர் எச்சரிக்கை! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

The country's economy is falling! AAP Minister Warning!

 

சன்யுக்த் ரோஜ்கார் அந்தோலன் சமிதி சார்பில் இணையவழி கூட்டம் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில அமைச்சருமான கோபால்ராய் கலந்துகொண்டு பேசினார். ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா இந்நிகழ்வில் பங்கேற்றார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோபால்ராய், “இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வருவது கவலையளிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேளாண் உற்பத்தி பெருகுகிறது. ஆனால் விவசாயிகளின்  வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உற்பத்திக்கான லாபகரமான விலை கொடுப்பதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் உரிய அடிப்படையான திட்டமிடல் இல்லாத நிலை தொடர்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் நாட்டின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள், இளைஞர்கள்,  மாணவர்கள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடும் தேவை எழுந்துள்ளது. இல்லையேல் நாட்டை பாதுகாக்க முடியுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் கச்சா விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.


 

The country's economy is falling! AAP Minister Warning!

 

அமெரிக்காவின் ஒரு டாலருக்கான இந்திய நாணயத்தின் மதிப்பு 79 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார கொள்கையின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்படுகின்றன. பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. 

 


சன்யுக்த் ரோஜ்கார் அந்தோலன் சமிதி, ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை வேலையின்மைக்கு எதிரான தேசிய இயக்கத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் விவசாயிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகள் பங்குபெறவுள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காணத் தேசியக் கொள்கையை உருவாக்குவது காலத்தின் தேவை” என்று தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘7 எம்.எல்.ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம்’ - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
arvind Kejriwal accuses BJP of negotiating crores of rupees with AAP MLAs

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, பாஜகவிற்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிகழ்வதால், அரசியல் பழிவாங்கலுக்காக இதுபோன்ற சம்பவங்களில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரை பாஜக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ரூ. 25 கோடி வரை தருகிறோம்; தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தருகிறோம் என்று கூறி  தங்கள் பக்கம் வருமாறு பேரம் நடத்தியுள்ளது” என்றார். தொடர்ந்து, “மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்துவிடுவோம்; பின்னர் தன் பக்கம் எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த 7 எம்.எல்.ஏக்களும் அதனை புறக்கணித்துள்ளனர்” என்றார்.

Next Story

‘ஆம் ஆத்மி தனித்துப் போட்டி’ - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
'Aam Aadmi alone contest' - Punjab Chief Minister's announcement!

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

vck ad

இந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது. ஆனால் அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி’ என அவர் கூறியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

'Aam Aadmi alone contest' - Punjab Chief Minister's announcement!

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.