Skip to main content

கரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைப்பது எப்படி?

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

 

CORONAVIRUS VACCINATION CERTIFICATE UNION HEALTH MINISTRY

கரோனா வைரஸின் இரண்டாவது அலையால் இந்திய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளில் தொடர் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. மேலும், கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

 

இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கவிருப்பதாகவும், அதற்கான பணிகளில் விமான போக்குவரத்து ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

CORONAVIRUS VACCINATION CERTIFICATE UNION HEALTH MINISTRY

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் எண்ணையும் இணைத்து சான்றிதழ் பெறும் வகையில் 'கோவின்' இணையதளத்தில் சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதன்படி, http://cowin.gov.in என்ற மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ 'கோவின்' (Co-WIN) இணைய தளத்திற்கு சென்று  'Raise an Issue' என்ற தெரிவில் 'பாஸ்போர்ட் விருப்பத்தை’ தேர்வு செய்து, பாஸ்போர்ட் விவரங்களைக் குறிப்பிட்டு புதிய கரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எந்த வித சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், உலகில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

ரூ.200ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; மத்திய உயிரிதொழில் நுட்பத்துறை அறிமுகம்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Cervical cancer vaccine at Rs.200; Introduced by Central Department of Biotechnology

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஜூன் 8ல்  மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும் சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தடுப்பூசியின் ஆரம்ப விலை  200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.