இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களாக கரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 90 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர்.
மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த சோதனை மூன்றாம் கட்டத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும் என்று அரசு நம்புவதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.