Published on 13/01/2022 | Edited on 13/01/2022
![Corona spread ... Modi consults with all state chief ministers!](http://image.nakkheeran.in/cdn/farfuture/oZJxxg64_J10pUFUbFit0lO18c4xxqozs136wSLhPiQ/1642043072/sites/default/files/inline-images/ZZZE_0.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 11 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.