Published on 04/08/2020 | Edited on 04/08/2020

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 803 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 18,55,745 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 38,938 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல் இதுவரை 12.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 5,86,298 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.