Published on 04/05/2021 | Edited on 04/05/2021
இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
மனிதர்களிடம் அதிக பாதிப்பு ஏற்படுத்தி வந்த இந்த கரோனா பெருந்தொற்று தற்போது விலங்குகளிடமும் தென்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட சிங்கங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.