
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்காவில் அதன் தாக்கம் என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 1,52,319 பேர் இதுவரை இந்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள். கரோனா தொற்றை குறைக்க பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்சபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,592 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ள சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே நாளில் 60,000-க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.