இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஜக்கார், குர்ஜீத் சிங் ஆகியோர் நாடாளுமன்ற வாயிலில் நின்றபடி பஞ்சாப் விவசாயிகள் ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். பஞ்சாப் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர்கள் உருளைக்கிழங்கு விற்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'மோடியின் தவறான விவசாய கொள்கைகள் காரணமாக விவசாயமே அழியும் நிலையில் உள்ளது. கேஷ்லெஸ் இந்தியா என்பதை போல விவசாயமில்லா இந்தியாவையும் உருவாக்குவதே மோடியின் லட்சியமாக இருக்கிறது. மோடியின் தலைமையிலான அரசு விவசாயிகள் பிரச்சனையை பற்றி கேட்க தயாராக இல்லை, ஆனால் அம்பானி மற்றும் அதானியின் பேச்சை கேட்க தயாராக இருக்கிறார்கள். சமீபத்தில் பிரதமர் பஞ்சாப் சென்ற பொது கூட அங்குள்ள சிறு விவசாயிகளின் பிரச்னை குறித்து அவர் பேசவில்லை. விலைவாசி ஏற்றதால் விவசாயிகளால் கடனையும் செலுத்த முடியவில்லை. அதனால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்கின்றனர்' என கூறினர்.