2019 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி டெல்லியில் வெளியிட்டார்.

அதில் இடம்பெறுள்ள சில முக்கிய திட்டங்கள்:
குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை.
2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்.
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.
நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்.
கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப்படும்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும்.
அரசு தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு, வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.