Published on 10/12/2019 | Edited on 10/12/2019
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட தினம் இந்திய அரசியல் சாசனத்திற்கு கறுப்பு தினம் என்றும், இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்தே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.