Skip to main content

முதல் குறி குடியரசு தலைவர் தேர்தல் - காய் நகர்த்தும் சந்திரசேகர ராவ்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

chandrasekar rao

 

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினார்.

 

இந்த சந்திப்பின்போது, 2024 ஆம் தேர்தலில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி மட்டுமின்றி, ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை தோற்கடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தற்போதைய நிலையில் குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற்றால், பாஜக எளிதில் வெல்லும் என்ற சூழலில், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வியடையும் எனவும், அப்போது எதிர்கட்சிகளின் கூட்டணி பலம்பெறும் என சந்திரசேகர ராவ் கருதுவதகாவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான் என்ன பாகிஸ்தான் குடிமகனா? - துரை வைகோ ஆவேசம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 Am I a citizen of Pakistan? - Durai vaiko 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை  ஒத்திவைத்தனர். மேலும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது புதன் கிழமை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்.. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இது மதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனச் சொல்லப்பட்டது. முன்னதாக, இன்று காலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள். சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது. 

பா.ஜ.கவை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள். ம.தி.மு.க, விசிக மட்டுமல்ல நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை. பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக பா.ஜ.கவிற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. 

அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள். என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன்” என்றார்.  

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிமுக, 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகள் மட்டுமே பெற்றதால் அந்த கட்சி அங்கீகாரம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளர்; நடிகர், டாக்டர், அரசியல்வாதி -  யார் இந்த மதுரை சரவணன்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், வேட்புமனு தாக்கல் என்று வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளார் பட்டியலை வெளியிட்டர். அதில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்தவர். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் முகாம் என மதுரையில் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான மருத்துவர் சரவணன், அரசியலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதே படத்தில் இவரும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமானவராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அங்கு ஒருவருடம் இருந்த சரவணன் கடந்த 2016 ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சரவணனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் போஸ் காலமானதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாஜகவில் சேர்ந்தார். கையோடு அவருக்கு பாஜக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவருக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார். மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சரவணனன் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சரவணன், திடீரென அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரையில் விருப்பமனு பெறப்பட்டது. ஆனால், போட்டியிட மதுரை மாவட்டத்தில் அதிமுக சீனியர் நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், விருப்பமனு கொடுத்த சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து எஸ்கேப் ஆகி வந்தனர். 

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

இதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த ஒரே நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான். முக்கிய நிர்வாகிகள் பலரை அதிமுக தலைமை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே மதுரை தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசன் மதுரை தொகுதியில் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி  சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், பிரமாண்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றுவந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவது மதுரை அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.