Skip to main content

ஆண் கொசு, பெண் கொசுவை அடையாளம் கண்டறிய 1.5 கோடி ரூபாய் செலவு செய்த முன்னாள் முதல்வர்- சந்திரபாபு நாயுடு குறித்து ஒய்.எஸ்.ஆர் மூத்த தலைவர்...

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. அதே நேரம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்னும் தோல்வியிலிருந்து மீளமுடியாமல் திண்டாடி வருகிறார்.

 

chandrababu naidu spends 1.5 crore rupees to found male and female mosquitoes

 

 

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஆண் கொசு, பெண் கொசுக்களை அடையாளம் கண்டறிய சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது 1.5 கோடி ரூபாய் செலவு செய்ததாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் விஜய்சாய் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "விஜயவாடாவில், உள்ள கொசுக்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்துகொள்ள ரூ .1.5 கோடி செலவு செய்தார் சந்திரபாபு. உலகில் எங்கும், யாரும் கொசுக்களை பற்றி தகவல் சேகரிக்க இதுபோன்ற முட்டாள்தனமான முயற்சி செய்யவேமாட்டார்கள். கொசுக்கள் ஆணா? பெண்ணா? என தெரிந்துகொள்ள இவ்வளவு செலவு செய்த யாரையும் நான் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்