Skip to main content

செல்போன் வெடித்து சிறுவன் பலி! - கேம் விளையாடிய போது விபரீதம்..

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

செல்போனை சார்ஜில் மாட்டிக்கொண்டே பயன்படுத்திய சிறுவன், செல்போன் வெடித்து உயிரிழந்தான்.

 

Mobile

 

சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் உள்ளது குத்ரபாரா கிராமம். இந்த கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் 12 வயது சிறுவன் ரவி சொன்வான், செல்போனை சார்ஜில் மாட்டிக்கொண்டே கேம் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்தத்தில் ரவி படுகாயமடைந்தான். ரவி விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பனுக்கும் மோசமான காயங்கள் ஏற்பட்டன.

 

இந்த விபத்தில் ரவியின் வயிற்றுப் பகுதி சிதைந்து, குடல் உறுப்புகள் வெளியே வந்துவிழுந்தன. இதனால், ஏற்பட்ட ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ரவியின் பெற்றோர் அவனது வயிற்றை துணியால் சுற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ரவியின் நிலைமை மோசமாக இருந்ததால், மருத்துவர்கள் அம்பிகாப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளனர். 

 

அந்தசமயம், ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரவியை டாக்ஸ்யில் வைத்து அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ரவி அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அவனது நண்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறான்.

சார்ந்த செய்திகள்