Skip to main content

"இது டெல்லி அல்ல, கொல்கத்தா"... கோலி மாரோ என கோஷமிட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை...

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் "கோலி மாரோ" என முழக்கமிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

mm

 

 

கொல்கத்தாவில் நேற்று அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில், பாஜக தொண்டர்கள் சிலர் "கோலி மாரோ" என முழக்கங்களை எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முழக்கமெழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, டெல்லி வன்முறை மத்திய அரசின் ஆதரவோடு நடைபெற்ற இனப்படுகொலை என விமர்சித்தார். அப்போது மேலும் பேசிய அவர், "பாஜக பேரணியில் "கோலி மாரோ" என கோஷமிட்ட 3 பேரை கொல்கத்தா போலீஸ் கைது செய்துள்ளனர். இது டெல்லி அல்ல, கொல்கத்தா. இந்த கோஷம் வன்முறையை தூண்டுவது, அரக்கத்தனமானது. இப்படிப் பேசுபவர்களை சும்மா விட மாட்டோம்" என தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்