Published on 30/08/2019 | Edited on 30/08/2019
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, செப்டம்பர் 14 முதல் 20 ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை 'மக்கள் சேவை' வரமாக கடைபிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு, 'சேவா சம்பத்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒரு வாரகாலம் சுகாதாரம் மற்றும் சமூக சேவை குறித்த விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், பிரதமரின் சாதனை குறித்த புத்தகங்கள் விநியோகம் ஆகியவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.