உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பேசும்போது பாஜக மத்திய அமைச்சர் உமாபாரதி மதசார்பின்மை பற்றி பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும் அவர் நேற்று பேசுகையில், "பாஜக தலைவர்களை மதவாதிகள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் மதப்பிவாதம் பேசவில்லை. தேசியவாதம் தான் பேசுகிறோம். கடவுள் ராமரை போற்றுகிறோம். 'பாரத் மாதா கீ ஜே' என கூறி பாரத மாதாவை போற்றுகிறோம். இதை எதிர்க்கட்சிகள் மதவாதம் என்று குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் மட்டும்தான் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்படுகிறது. மதச்சார்பின்மை குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை. அப்படியும் மதச்சார்பின்மை குறித்து போதிக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். நானும் ஆஜ்மீர் தர்கா, ஹாஜி அலி தர்கா ஆகிய இடங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். அனைத்து கடவுள்களையும் நான் மதிக்கிறேன்" என கூறினார். அவரது இந்த பேச்சு நாடு மதசார்பற்ற கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.