மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அவர், "பிரதமர் மோடி தினமும் 10 முறை பவுடர் அடிக்கிறார், 10 முறை ஆடைகளை மாற்றுகிறார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி மோடியை குறித்து குறை கூறுகிறார். மோடி அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கிறார். எனவே அவர் பவுடர் அடிப்பதிலும், ஆடை மாற்றுவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் (கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி) ஒரு நாளைக்கு 100 முறை குளித்தாலும் எருமை மாடு போல கறுப்பாகத்தான் இருப்பீர்கள்" என கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு தற்போது எதிர்கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.