Skip to main content

மூன்று சக்கர விற்பனையில் சரிவடைந்த பஜாஜ் நிறுவனம்...!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

bb

 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 4.07 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு 3.53 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்றிருந்தது. இதன் மூலம் பஜாஜ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 

 

ஜனவரி மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 3.50 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையில் 12 சதவீதம் சரிவடைந்து உள்ளது. அதேசமயம் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதியை பொருத்தவரை 16 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் முதல் இளம்வயது சிஇஓ... ராகுல் பஜாஜ் காலமானார்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

l;'

 

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1938ம் ஆண்டு பிறந்த அவர், சட்டப்படிப்பு முடிந்துள்ளார். மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். 1965ம் ஆண்டு நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தவர், மூன்றே ஆண்டுகளில் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஒரு நிறுவனத்தின் மிக இளம்வயதில் சிஇஓவாக பதவியேற்ற முதல் இந்தியர் இவர்தான். 

 

இவர் கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். மேலும் 2006ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை அவர் இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.