உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் பகுதியில் நேற்று பாபா ராம்தேவ், இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என பாபா ராம்தேவ் கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 150 கோடியை தாண்டிவிடும். இப்படியே போனால் நாட்டில் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால் இரண்டாவது குழந்தைக்கு மேல் ஒரு குடும்பத்தில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் வாக்குரிமை கிடையாது என்ற சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்கள் தொகை கட்டுக்குள் வரும். மேலும் மத்திய அரசு நாடு முழுவதும் மது விற்பனை மற்றும் தயாரிப்பை தடை செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.