Published on 10/04/2021 | Edited on 10/04/2021

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற முதல்வர்களில் ஒருவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அவரின் மறைவிற்குப் பிறகு, தற்போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்து வருகிறார். இவரது தங்கை சர்மிளா, 'ராஜண்ண ராஜ்யத்தை' தெலுங்கானாவில் கொண்டுவர புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8 ஆம் தேதி, புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார். அன்றைய தினம் கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை சர்மிளா அறிவிக்கவுள்ளார். மேலும் தெலுங்கானாவில் கலியாகவுள்ள 1.91 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று தொடங்கி 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் சர்மிளா அறிவித்துள்ளார்.