Skip to main content

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1998- 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக பதவி வகித்த போது, 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

CONGRESS




அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இருப்பினும் ராகுல் காந்தி தலைவராக இருந்த போது தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது என்பது நினைவுக் கூறத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்