Skip to main content

ஏர்டெல்லின் புதிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு...!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சேவை மையத்துடன் தொடர்புகொள்ள கூகுள் அசிஸ்டென்ட் மூலம் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது பாரதி ஏர்டெல். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த சேவை ஆங்கிலத்தில் உள்ளது. வருங்காலத்தில் மற்ற பிராந்திய மொழிகளிலும் வர உள்ளது.

 

as

 

Artificial Intelligence (AI) என்னும் புதிய தொழில்நுட்பம்கொண்டு செயல்படும் இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் இருப்புத்தொகை, ரீசார்ஜ் சம்மந்தமான தகவல்கள், புதிய சலுகைகள் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பலாம். இதை கண்காணித்து ஏர்டெல் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூகுள் அசிஸ்டென்ட் மூலம் தகுந்த பதில்களை ஏர்டெல் அசிஸ்டென்ட் நமக்கு அளிக்கும். 

 

"தற்போது ஸ்மார்ட்போன்கள் இந்தியர்களுக்கு அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. இந்த கால கட்டத்தில் நாங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய தொழில்நுட்பம் டிஜிட்டல் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதன் மூலம் லட்சக்கணக்கான ஏர்டெல் வாடிக்கையளர்கள் எங்களுடன் தொடர்பிலேயே இருக்க முடியும். ஆங்கில மொழியில் மட்டுமே தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய சேவை மற்ற  பிராந்திய மொழிகளிலும் நடைமுறைக்கு வரும்.” என்று பாரதி ஏர்டெலின் சில்லறை வர்த்தக இயக்குநர் ஷராங் கானதே கூறினார்.

 

a

 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் என இரண்டிலும் வேலை செய்யும் விதத்தில் அறிமுகத்திற்கு வந்துள்ளது ஏர்டெல் அசிஸ்டென்ட். இந்த புதிய சேவை ஏர்டெல்லின்  புதிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வாடிக்கையாளர்களின் வாங்கும் முறையை மாற்றியமைத்து மேம்படுத்துவதே ஏர்டெல் டிஜிட்டல் புதிய கண்டுபிடிப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

 

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தன்னுடைய நிலுவையில் உள்ள தொகை, என்ன காரணங்களால் பில் அதிகமாக வந்துள்ளது, பில் சம்மரி, தற்போதைய டேட்டா பயன்பாட்டின் அளவு, நடப்பில் உள்ள திட்டம் மற்றும் புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறலாம். ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் தற்போதைய நிலுவையில் உள்ள டேட்டாவின் அளவு, அக்கவுன்ட் பேலன்ஸ் உள்ளிட்ட தகவல்களை பெறலாம்.

 

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் முகப்பு பட்டனை லாங் ப்ரஸ் மூலம் இந்த ஏர்டெல் கூகுள் அசிஸ்டென்ட் வசதியை பெறலாம். ஐஓஎஸ் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் ஏர்டெல் கூகுள் அசிஸ்டென்ட் சேவையை டவுன்லோட் செய்ய வேண்டும். ஏர்டெல் அசிஸ்டென்ட் சேவையானது “Talk to Airtel”, “Ask Airtel” or “Get Airtel” என்று நாம் சொல்லும்போது அது தன்னுடைய செயல்பாட்டை தொடங்கும். வாடிக்கையாளர்களின் வசதியை புதிய தொழில்நுட்பம் கொண்டு மேம்படுத்தியுள்ள ஏர்டெல்லின் இந்த செயல்பாடு, மற்ற நிறுவனங்களையும் புதிய தொழில்நுட்ப வசதியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

சார்ந்த செய்திகள்