Skip to main content

தொடர்கதையாகும் எம்.பி க்கள் சஸ்பெண்ட்... இன்று மேலும் 3 எம்.பி க்கள் சஸ்பெண்ட்

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

 

sxCcx

 

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக எம்.பி கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன. இந்நிலையில், மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2 ஆம் தேதி அதிமுக எம்.பி.க்கள் 25 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். தொடர்ந்து அடுத்த நாளும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மேலும் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவை கூடியதும் அதிமுக எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால்  எம்.பி.க்கள்  செங்குட்டுவன், வேணுகோபால், ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் 2 நாட்கள் இடைநீக்கம்  செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்