![adani - mamata](http://image.nakkheeran.in/cdn/farfuture/Uot-7J0BmVW75rKi6tmHJy_Si6AUIKo5Ma9syMbkY-0/1638509982/sites/default/files/inline-images/SWQD.jpg)
மும்பைக்கு சுற்றுப்பயணம் செய்து அரசியல் தலைவர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, நேற்று (02.12.2021) மேற் குவங்கம் திரும்பினார். இந்தநிலையில், நேற்று மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி, மம்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மம்தா மற்றும் அதானிக்கு இடையே சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடைபெற்றதாக அம்மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சந்திப்பின்போது மம்தாவின் மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் உடனிருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் ஆலோசனைக்குப் பிறகு அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தாவுடனான சந்திப்பு குறித்து, "வெவ்வேறு முதலீட்டுச் சூழல்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் அளப்பரிய சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 2022இல் நடைபெறும் வங்கத்தின் உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.