Published on 11/10/2018 | Edited on 11/10/2018

இந்தியா முழுவதும் நிலக்கரிவு இறக்குமதியில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்குள் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அதானி நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 40 நிறுவனங்கள் அடங்கும். அந்த அனைத்து நிறுவனங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொதுநல வழக்காடும் மன்றம் தொடர்ந்த வழக்கு விசாரணை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.