Skip to main content

தலைநகரம் யாருக்கு..? இன்று காலை வாக்கு எண்ணிக்கை!

Published on 10/02/2020 | Edited on 11/02/2020

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் 8ம் தேதி நடைபெற்றது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக, மற்றும் காங்கிரஸ் என மூன்று முக்கிய கட்சிகளும் தனித்து நின்று மும்முனை போட்டியை ஏற்படுத்தினாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேதான் டெல்லியில் கடும் போட்டி நிலவி வருகிறது. 



இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளிவர துவங்கியுள்ளது. அதில் ஆம் ஆத்மி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி மட்டும் 46 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு 22 முதல் 24 தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

சார்ந்த செய்திகள்