Skip to main content

"நிறைய பயனடைந்தேன்"  - 11 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் கூறும் வினோத காரணம்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

BIHAR

 

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தின் ஓரை கிராமத்தில் வசிக்கும் பிரம்மதேவ் மண்டல் என்னும் 84 வயது நபர், 12-வது முறையாக கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முயன்றபோது பிடிபட்டுள்ளார். அந்த நபர், தான் இதுவரை 11 முறை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை, 11 டோஸ்களை செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள அவர், 11 டோஸ்களை செலுத்திக்கொண்ட தேதியையும், இடங்களையும் கூட கூறுகிறார்.

 

மேலும், வெவ்வேறு அடையாள அட்டைகள் மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி 11 தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டதாக கூறும் அவர், "தடுப்பூசிகளால் நிறைய பயனடைந்தேன். இந்த தடுப்பூசிகளால் எனக்கு முதுகு வலி மற்றும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைத்தது. அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

 

இதற்கிடையே மாதேபுரா மாவட்ட சிவில் சர்ஜன் அமரேந்திர பிரதாப் ஷாஹி, ஓரே நபர் 11 முறை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதாக கூறுவது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்