Published on 17/10/2020 | Edited on 17/10/2020

கேரளாவில் 385 மருத்துவர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் இருந்ததால் 432 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 385 மருத்துவர்களை பணி நீக்கம் செய்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்துக்கு முறையான காரணங்களை தொடர்ந்து தெரிவிக்காமல் இருந்ததால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்கள் என்ன முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.