Published on 24/11/2018 | Edited on 24/11/2018

கர்நாடக மாவட்டம், மாண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாண்டவபுரம் அருகில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதில் பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.