Skip to main content

’எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?’- ஓய்வறியா சூரியனுக்கு நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இசை அஞ்சலி!

Published on 25/08/2018 | Edited on 27/08/2018

 

n

   

 மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மாநிலந்தோறும் நினைவஞ்சலிகளும், நினைவேந்தல் கூட்டமும் ஆங்காங்கே நடைப்பெற்று வருகின்றது. அவ்வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் சார்பில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

n

     

nn

 

மாவட்டத்தில் சுமார் 85க்கும் அதிகமான நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களை உள்ளடக்கிய சிவகங்கை மாவட்ட நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழுக்கும், இசைக்கும் செய்த பெரும் சேவையினைப் பாராட்டி, " ஓய்வறியா சூரியனே எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்.?" எனும் இசை அஞ்சலியை காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரில் சமர்ப்பித்தனர்.

 

n

 

பெண் உட்பட 25 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் 25 தவில் கலைஞர்கள் இணைந்து, கோவிலூர் வாகனப் பரிசோதனைச் சாவடியிலிருந்து நடை பயணமாய் நாதஸ்வரம் வாசித்தும், தவில் வாசித்தும் இசைத்துக் கொண்டே கொற்றவாளீசுவரர் கோயிலை அடைந்து "இசை அஞ்சலியை" செலுத்தினர் கலைஞர்கள். இந்நிகழ்வு அங்கிருந்தோர்களை நெகிழ்வடைய செய்தது போற்றத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்