Skip to main content

தாயின் தகாத உறவை தந்தையிடம் காட்டிக் கொடுத்ததால் 10 வயது சிறுவன் அடித்துக் கொலை!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
kid


சென்னை நெசப்பாக்கத்தில் தாயின் தகாத உறவை தந்தையிடம் காட்டிக் கொடுத்த 10 வயது சிறுவன் கள்ளக் காதலனால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேரந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக்கேயன் (38). இவரது மனைவி மஞ்சுளா (34). அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற 10 வயது மகன் இருந்தான். தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த ரித்தேஷ் சாய் நேற்று வீடு திரும்பாததை அடுத்து, அவரது தந்தை கார்த்திகேயன் எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கார்த்திக்கேயன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, இவர்களது குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே மஞ்சுளாவிற்கும் சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மஞ்சுளாவின் கணவர் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகராஜ் மீது காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
 

nagaraj


இந்நிலையில் சிறுவன் ரித்தேஷை நேற்று மாலை டியூசன் சென்டரில் இருந்து நாகராஜ் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த நாகராஜை தேடி அவரது சொந்த ஊரான வேலூருக்கு சென்றனர். அங்கு மறைந்து இருந்த நாகராஜைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மஞ்சுளாவிற்கும் தனக்கும் இருந்த உறவுக்கு சிறுவன் ரித்தேஷ் சாய் இடையூறாக இருந்ததாகவும், இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதற்கு சிறுவன் ரித்தேஷ் சாய் தான் என்ற காரணத்தாலும் ரித்தேஷை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி, ரித்தேஷை நேற்று டியூஷனில் இருந்து அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து மதுபாட்டிலால் சிறுவன் ரித்தேஷ் தலையில் அடித்தக் கொலை செய்து அங்கேயே புதைத்தேன் என காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் நாகராஜ். இதனை தொடர்ந்து சிறுவன் ரித்தேஷின் தாய் மஞ்சுளாவையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்