உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் உத்திரப்பிரதேச எம்எல்ஏவான குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக சார்பில் உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல்தீப் சிங் செங்கார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து இவர் நீக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றபோது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் அப்பெண் வாழ்ந்து வந்த சூழலில், லாரி மோதி அப்பெண்ணின் தாயும், அத்தையும் சமீபத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் பாலியல் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த டிஸ் ஹசாரி நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை குறித்த விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. ல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.