Published on 01/02/2020 | Edited on 01/02/2020

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் 10 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.