Published on 28/06/2020 | Edited on 28/06/2020
![thoothukudi district saththankulam inspector suspended](http://image.nakkheeran.in/cdn/farfuture/mGIK0XQnJrc-8KA0yRHEbyfhQuJA8Aoj2pO_fU8KGaA/1593338778/sites/default/files/inline-images/kovil%20pa2333.jpg)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.