கஜா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்றிரவு 11.00 மணியளவில் பாம்பன் பகுதியில் கரையைக் கடக்க இருக்கிறது. கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள குறிப்பு...
கஜா புயலால் சென்னை முதலில் மழையைப் பெற்றுள்ளது. கஜா புயல் கடற்கரையை நெருங்கும்போது, மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும். நாகை-வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடந்தபின் உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.
கஜா புயல் தீவிரமடையும்போது, மேகக்கூட்டங்களை மிகநெருக்கமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும். எப்படியாகினும், புல்-எஃபெட் மூலம், சென்னைக்கு அவ்வப்போது 16, 17-ம் தேதிவரை இடைவெளிவிட்டு மழை பெய்யும். மீண்டும் சொல்கிறேன், இது சென்னைக்கான புயல் அல்ல, ஒருபோதும் அவ்வாறு வரவில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் மழை போனஸ் போன்றது, அடுத்த 3 நாட்களில் நமக்கானது கிடைக்கும்.