Skip to main content

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Earthquake in Jammu and Kashmir after Afghanistan!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  

150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று (04-01-24) நள்ளிரவு 12:38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால், எந்தவொரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. 

சார்ந்த செய்திகள்