Published on 20/04/2019 | Edited on 20/04/2019
வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

முன்னரே இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக பொறுப்பாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து மே 1ம் தேதி முதல் 8ம் தேதிவரை இந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். மே 1 அன்று ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.