
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க இருக்கும் நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது,
படிக்கும் போதே நடிகர் கமல்ஹாசனின் ரசிகனாக இருந்து வளர்ந்தவன். தமிழ்நாட்டில் மிகமோசமான ஒரு சூழலுக்கு அரசியல் ஆட்சி அதிகாரம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது ஒரு மாற்றம் வந்துவிடாதா என்று ஏங்கிகொண்டிருக்கும் நேரத்தில், அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என 21ம் தேதி தன் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார்.
இதற்காக ஒவ்வொரு தலைவராக அவர் சந்தித்து வாழ்த்துகளை பெற்று வந்த நிலையில், என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நான் அவர் என்னை சந்திப்பது நன்றாக இருக்காது. நான் அவரை சந்திக்க வருகிறேன் என வந்துள்ளேன். அவர் தொடங்குகிற இந்த அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அதுவும் ராமேஸ்ரத்தில் இருந்து தொடங்குகிறார். அந்த பயணம் ஒரு புரட்சிகர அரசியல் பயணமாக, வெற்றிகர அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என சீமான் கூறினார்.
அவருடைய அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் அதற்கு தான் பதிலளிப்பதாக கூறி தொடர்ந்தார். என்னுடைய கொள்கை என்ன என்பது அவருக்கு தெரியாது. என்னை அவருக்கு தெரியும். நான் நடித்த சினிமா பற்றி தான் அவருக்கு தெரியும் என்று அவர் கூறினார்.
அரசியலுக்கு எல்லோரும் வரவேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். நான் தெளிவாக கூறுகிறேன் இந்த ஆட்சி சரியில்லை என்று பின்னர் எப்படி அவர்களை சந்திப்பேன். நான் அதிமுகவில் யாரையும் சந்திக்கப் போவதில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.