Skip to main content

விக்கிரவாண்டி எங்களுக்கு கேரண்டி..! கம்பு சுத்தும் கழகங்கள்!

Published on 08/10/2019 | Edited on 14/10/2019

இன்னும் 6 நாட்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இலை காணாமல் போக, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல தொகுதிகளில் சூரியன் உதித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன் உடல் நிலைக்காரணமாக மரணமடைந்தார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் இந்த தொகுதிக்கு வேலூர் மக்களைவை தொகுதியுடன் சேர்ந்தே தேர்தல் நடத்தப்படும் என்று பார்க்கப்பட்ட நிலையில், அப்போது வேலூர் தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி தலைமைகள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரச்சார களத்தில் குதிக்க உள்ளனர். அதிமுக தரப்பில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர் படை விக்கிரவாண்டியை சுற்றி வருகிறது. 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களும் அதிமுகவிற்காக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
 

jkn



கடந்த தேர்தலில் தனியாக நின்ற பாமக 40000 வாக்குகள் வாங்கிய நிலையில், அந்த வாக்குகள் முழுவதுமாக அதிமுகவுக்கு வந்து சேரும் என்று நம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? என்றால் இது 'இடைத்தேர்தல்' என்று கமுக்கமாக சிரிக்கிறார்கள் அண்ணா திமுக நிர்வாகிகள்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 22 தொகுதி இடைதேர்தலை நியாபகப்படுத்தினால், சார் அது மக்களவை தேர்தலின் போது நடந்தது என்று சொல்லிக்கொண்டே கடந்து செல்கிறார்கள். இவர்களின் எண்ணம்தான் என்ன? என்று அதிமுக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

 

hjk



அதில், " விக்கிரவாண்டி தொகுதியை முதல்வர் ஒரே ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலாக நினைக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்கு மக்கள் போடும் மார்க்காக பார்க்கிறார். தான் அதிக மார்க் எடுக்கவில்லை என்றாலும், திமுக தன்னை விட குறைவான மதிப்பெண்ணை எடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார். அந்த வகையில், தொகுதியின் சந்துபொந்துகளை கூட நன்கு அறிந்து வைத்துள்ள சண்முகத்திடம் இந்த பொறுப்பை கொடுத்துள்ளார். பாமக வாக்குகளை திமுக யாரை வைத்து சமாதானம் பேசினாலும் அதிமுகவிற்கு வருவதை தடுக்க முடியாது. ஏனென்றால் சில மாதங்களாக பாமக தலைமைக்கும், திமுக தரப்புக்கும் நடக்கும் சண்டை உலகறிந்த ஒன்று. எனவே பாமகவின் வாக்குகளை வன்னிய பிரதிநிதிகளை வைத்து வளைத்து போடலாம் என்ற திமுகவின் கனவு கானல் நீராகத்தான் போக போகிறது. அதிமுகவின் மற்ற கூட்டணி கட்சியினருக்கு அங்கு போதுமான அளவு வாக்கு பலம் இல்லை என்றாலும், பாமக அதிமுகவை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதனை தெரிந்து கொண்டதால்தான், வன்னிய வாக்குகளை மடைமாற்ற இன்று திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு ராமதாஸும் பதில் அளித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. மாவட்ட செயலாளர் நியமனத்திலேயே வன்னியர்களுக்கு இடம் தராத திமுக, அரசாங்க  வேலைவாய்ப்பில் எப்படி இடம் தரும் என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்துள்ளது. எனவே திமுகவின் அறிவிப்பு தேர்தல் களத்தில் பயன்தராது, அதிமுக 20000 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்" என்றார்.

அதிமுக தரப்பில் நிலைமை இப்படி என்றால் விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் தவறு நிகழும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி மோடி எதிர்ப்பலையில் கிடைத்த ஒன்று, அதிமுக பாஜக இல்லாமல் தனித்து நின்றிருந்தால் அவர்களே வெற்றிபெற்றிருப்பார்கள் என்ற செய்தி உடனடியாக சொல்லப்படும். இது இன்னும் 15 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் திமுகவிற்கு பின்னடைவை கொடுக்கும். எனவே இதனை நன்கு உணர்ந்ததாலோ என்னவோ இத்தொகுதி மீது திமுக தலைமை அதீத அக்கறை காட்டி வருகிறது.

அதன் உச்சபட்சமாக, " திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு திமுக தலைமை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான கோரிக்கை எதுவும் எழாத நிலையில், அதற்கான அவசியம் எங்கு வந்தது என்ற வினாவும் அரசியல் அரங்கில் தற்போது திமுக தரப்பை பார்த்து எழுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக பிரமுகரிடம் பேசியபோது, "பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் அவரை போல ஸ்டாலினுக்கு ஓய்வு இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை திமுகவை வம்பிழுக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. 2014 தேர்தலில் தனியாக தருமபுரியில் வெற்றிபெற முடிந்த அன்புமணியால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற முடியவில்லையே? பாமகவால் வெற்றிபெற முடியும் என்றால், அவர்களின் கோட்டை என்று சொல்லப்பட்ட தருமபுரியை ஏன் கோட்டை விட்டார்கள். வெற்று கூச்சல் இடுவதற்கு பாமகவை விட ஒரு சிறந்த கட்சி தமிழகத்தில் இன்னும் பிறக்கவில்லை.
 

cvj



மூன்று மாவட்ட செயலாளர்கள் பதவி இருந்தும் வன்னியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று அவர் கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதைதான். கட்சி தொடங்கிய நாளில் இருந்து கூடவே இருக்கும் ஜி.கே மணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, முதலில் அவர்கள் கட்சியில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள். வார்டு மெம்பரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை அவர் மகனே போட்டியிடுவார், அவரை தவிர வேறுயாரும் கட்சியில் இல்லையா? திமுகவில் வன்னியர் மாவட்டச் செயலாளர்கள் இல்லையா என்ன? நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்னிய இன பிரதிநிதிகளை திமுக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவில்லையா? அதையும் தாண்டி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த உள் ஒதுக்கீடு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கவில்லை. ஏற்கனவே கலைஞரால் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லப்பட்ட ஒன்றுதான். எங்களால் இரண்டு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத காரணத்தால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. எனவே தற்போது ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்கிறோம். இதில் எங்கே இருக்கிறது அரசியல்? விக்கிரவாண்டி திமுகவிற்கு கேரண்டி" என்றார் முடித்தார் அந்த நிர்வாகி.
 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.