Skip to main content

பெரியாரை எதிர்த்தவர்களின் அழைப்பின்பேரில் வந்த அம்பேத்கர் கூறியது இதுதான்...

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
ambedkar


இன்று பெரியாரின் 140வது பிறந்தநாள் இந்த காலகட்டத்திலும் கூட பெரியாரை, பெரியாரியத்தை ஒழிக்க வேண்டும் என்ற பகல் கனவில் பலர் அம்பேத்கரையும், அம்பேத்கரியத்தையும் துணைக்கு அழைக்கிறார்கள். இது இப்போது மட்டுமல்ல, பெரியாரும், அம்பேத்கரும் உயிரோடிருந்த காலத்திலேயே நடந்துள்ளது.
 

1944ம் ஆண்டு பெரியாரின் மீது அதிருப்தி கொண்டிருந்த நீதிக்கட்சியின் முன்னணி தலைவர்கள் இந்தியா முழுவதும் சாதி ஒழிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்த அம்பேத்கரை சந்தித்தனர். அம்பேத்கரின் ஆதரவைப்பெற்று பெரியாரை வெல்லலாம் என்பது அவர்களின் கணிப்பு.  சென்னை வந்த அம்பேத்கர் சென்னை கன்னிமரா ஹோட்டலில் ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பெரியார் போன்றதொரு தலைவரும், அவர் கூறியது போன்ற தெளிவான திட்டங்களும், கருத்துகளும் தேவை எனக் கூறினார்.