Skip to main content

நான் மைக் டைசன், நாக்கவுட் தான்... பா.ஜ.க.வை முகவரி இல்லாமல் செய்துவிடுவேன்... பஞ்ச் 2018

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
punch 2018

 

2018 பஞ்ச் டயலாக்களுக்கு குறைவில்லாத வருடம், பத்திரிகையாளர் சந்திப்பு, விழா, மேடை, கண்டனக்கூட்டம் என அனைத்து இடங்களிலும் நம் அரசியல் தலைவர்கள்  பஞ்ச் டயலாக்குகள் பேசினர். அவற்றுள் சில...

 

 

  • ஆர்.கே.நகரில் நடைபெற்றது இடைத்தேர்தல் அல்ல எடைத் தேர்தல். -டிடிவி தினகரன்
     
  • ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான். -தமிழிசை
     
  • ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் போதும். -மு.க.ஸ்டாலின்
     
  • இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. -ரஜினி
     
  • ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல -ராஜேந்திர பாலாஜி
     
  • நான் உங்கள் வீட்டு விளக்கு -கமல்ஹாசன்
     
  • எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது. -எடப்பாடி பழனிசாமி
     
  • தூங்குகிற புலியை மத்திய அரசு இடருகிறது. -வைகோ
     
  • கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ இந்தியா வரவில்லை. -கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
     
  • ஆன்மீக இடத்தில் அரசியல் பேசுவதா?  -ரஜினிகாந்த்
     
  • இது ரத யாத்திரை இல்லை, ரத்த யாத்திரை! -கி.வீரமணி
     
  • வாடிவாசல் திறந்த எங்களுக்கு.. மோடி வாயை திறக்க தெரியாதா? -போராட்டக்களத்தில் மாணவர்கள்..!
     
  • போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது -வேல்முருகன்
     
  • பா.ஜ.க.வை முகவரி இல்லாமல் செய்துவிடுவேன்! - சந்திரபாபு நாயுடு
     
  • தமிழக மக்கள் மோடியின் பக்கம் உள்ளனர் -தமிழிசை
     
  • துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? -டி.ராஜேந்தர்
     
  • போராட்டம்.. போராட்டம்ன்னு போய்ட்டா தமிழ்நாடு சுடுகாடாக மாறும்! -ரஜினிகாந்த்
     
  • மதுரை விரைவில் சிட்னியாக மாறப்போகிறது -செல்லூர் ராஜூ
     
  • முகவரி இல்லாத அழகிரி -ஆர்.பி.உதயகுமார்
     
  • ஜெ. அரசின் சாதனைகளை நிலவு வரை எடுத்து செல்வோம், ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது. -ஆர்.பி. உதயக்குமார்
     
  • நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது எல்கேஜி படிக்க வந்தவர் டிடிவி தினகரன் -ஓபிஎஸ்
     
  • நான் மைக் டைசன், நாக்கவுட் தான் -ஜெயக்குமார்
     
  • அதிமுக பாஜகவுக்கு அடிமையில்லை, மக்களுக்கு மட்டும்தான் அடிமை -ராஜேந்திர பாலாஜி
     
  • எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம் -ரஜினிகாந்த்
     
  • ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டுப்போச்சு -ஜெயக்குமார்
     
  • அதானி, அம்பானி நினைவில் மோடி, கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் நினைவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். -மு.க.ஸ்டாலின்
     
  • மக்களை நன்முறையில் பார்த்தால், அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் -தமிழிசை சௌந்தரராஜன்
     
  • நான் என்ன சொல்கிறேனோ அதைதான் செய்வேன் -ராகுல் காந்தி
     
  • இது வெறும் ஓட்டு அல்ல, உங்கள் ஆயுதம் -ராகுல் காந்தி
     
  • ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன், எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். -பொன்.மாணிக்கவேல்
     
  • ஒரு அடி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் -தினகரன்
     
  • எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது -அன்புமணி

 

 

 

பாம்பைக் கடித்தவர்... வயலில் சன்னி லியோன் பேனர் வைத்தவர்... என்னலாம் பண்ணிருக்காங்க பாருங்க!!! விநோதங்கள் 2018!!! பகுதி 1