Published on 17/01/2025 | Edited on 17/01/2025
ஹாலிவுட்டில் இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் டேவிட் லிஞ்ச். அதோடு ஆவணப்படங்கள், ஏகப்பட்ட குறும்படங்கள், தொகலைக்காட்சி மற்றும் வெப் தொடர்கள் என பல்வேறு சினிமாக்களை இயக்கியுள்ளார். இவரது பணியை கௌரவிக்கும் விதமாக 2019ஆம் ஆண்டு அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவர் தீவிர புகைப்பிடிக்கும் நபர் என்பதால், எம்பைசிமா எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள போராடி வருவதாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இவர் தற்போது இறந்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதையொட்டி ஹாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.